26.1 C
Chennai

சுவையான குடல் குழம்பு.. வீட்டில் இப்படி செய்து அசத்துங்க..!

- Advertisement -

தேவையான பொருட்கள்:

ஆட்டு குடல் – 750 கிராம்

- Advertisement -

பெ.வெங்காயம் – 4

தக்காளி – 4

- Advertisement -

தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசா வுடன் )

இஞ்சி பூண்டு – விழுது

- Advertisement -

பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்

மிளகாய்த்தூள்- தேவையான அளவு

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கொ.மல்லி, புதினா – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )

குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் நறுக்கின வெங்காயம் வதக்கி கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.(பூண்டு பல் கொஞ்சம்)

நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் குக்கரில் இருந்து வெந்த குடலை இதில் போட்டு பிரட்டவும். இதுவும் நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்…இட்லிக்கு சரியான டிஷ் இது தான்.

வெறும் குடல் வறுவல் மட்டும் என்றால் தேங்காய் சேர்க்காமல் இருந்தால் போதும். நன்கு வதக்கியவுடன் பரிமாறலாம்.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixty seven − 63 =

error: