கோடை காலத்தில் கிர்ணிப்பழம் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகும். இதில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் – சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. வாங்க! சுவையான கிர்ணிப்பழ கீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையானவை:
கிர்ணிப்பழம் – பாதி அளவு,
திக்கான பால் – 200 கிராம்,
பாதாம், முந்திரி – தாலா ஒரு டீஸ்பூன்,
மில்க்மெய்ட், சர்க்கரை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும்.
கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் – முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்றும் பருகலாம்.
Leave a Comment