வஞ்சிரம் மீனை பயன்படுத்தி கபாப் செய்து ருசிக்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் = ஒரு கிலோ
மிளகாய் தூள் = இரண்டு ஸ்பூன்
வினிகர் = ஒரு ஸ்பூன்
தக்காளி விழுது = இரண்டு ஸ்பூன்
எலுமிச்சை சாறு = இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் = ஒரு ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
தேங்காய்ப்பால் = 100 மில்லி
எண்ணெய் = தேவையான அளவு
மைதா = கால் கிலோ
வஞ்சிரம் மீனை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு கழுவி தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தக்காளி விழுது, வினிகர், மிளகாய் தூள், தேங்காய் பால், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து வைக்கவும்.
நறுக்கிய வஞ்சிரம் மீன் துண்டுகளை இந்தக் கலவையுடன் சேர்த்து புரட்டி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை நன்கு புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், மைதாவில் புரட்டி எடுத்த வஞ்சிரம் மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். பொறித்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து கொத்தமல்லி தழை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.