தேவையான பொருட்கள் :
- வாழைப்பழம் – 6
- பலாச்சுளை – 5
- கமலா ஆரஞ்சுப்பழம் – 1
- தேன் – 2 மேஜைக்கரண்டி
- பேரீச்சம்பழம் – 4
- கிஸ்மிஸ் – 2 மேஜைக்கரண்டி
- நெய் – 1 தேக்கரண்டி
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
செய்முறை :
வாழைப்பழத்தை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆரஞ்சு பழத்தை உரித்து, சுளையின் தோலையும் உரித்துக் கொள்ளவும்.
பலாச்சுளையின் கொட்டையை நீக்கிவிட்டு மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பேரிச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் பழங்களைப் போட்டு, தேன், குங்குமப்பூ, பேரிச்சம்பழத்துண்டுகள், நெய், கிஸ்மிஸ் இவற்றைக் கலந்து, பிசைந்து எடுத்து வைத்து பரிமாறவும்.
கமலா ஆரஞ்சு சுளை துண்டுகளை மட்டும் கடைசியாகப் போட்டு லேஸாக பிசைந்தால் போதும். முதலிலேயே கலந்து பிசைந்தால் கசப்பு ஏறிவிடும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh