கீரையை உபயோகித்து சத்தான மசியல் செய்வது எப்படி என்று பாப்போம். இதில் வெறும் கீரை, பூண்டு மற்றும் உப்பு மட்டும் தான் உள்ளது, ஆனால் மிகவும் சுவையான மசியல்.
கீரை மசியலை சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முளை கீரை – 1 பெரிய கட்டு
பூண்டு – 3 பல்
உப்பு – தேவையான அளவு
சக்கரை – சிறிதளவு
செய்முறை:
கீரையை, வேர்ப்பகுதி நீக்கி, நன்கு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இரண்டு மூன்று முறை அலசவும். பிறகு, அடுக்கி, பொடியாக நறுக்கவும்.
1 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் அறிந்த கீரை, சக்கரை சேர்த்து, தண்டு மிருதுவாக வேகும் வரை கொதிக்க விடவும்.
தண்ணீரிலிருந்து வடித்து, ஆறவைக்கவும்.
முதலில் உரித்த பூண்டு பற்கள், உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு, வேக வாய்த்த கீரையை சேர்த்து அரைக்கவும்.
சூடான சாதம், நெய் சேர்த்து மசியல் சேர்த்து பிசைந்து உண்ணலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh