சத்து நிறைந்த கொள்ளு பருப்பை வைத்து ஈசியாக ரசம் செய்யும் முறை :
தேவையான பொருட்கள்:
கொள்ளு = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லி இலை = 1 சின்ன கொத்து
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
தனியா தூள் = 1 ஸ்பூன்
மிளகு = 1 ஸ்பூன்
அரைத்த தேங்காய் = 1 ஸ்பூன்
சீரகம் = 2 ஸ்பூன்
புளி = சிறிய உருண்டை
பட்டை, கிராம்பு = தலா 2 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
முதலில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து, வேகவைக்கவும், வேக வைத்த பருப்பை கடைந்து நீரை வடிகட்டவும், வடிகட்டிய நீரை தனியாக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தனியா தூள், சீரகம், அரைத்த தேங்காய் விழுது ஆகியவற்றை வதக்கவும், இதனுடன் மிளகு, மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கி வைக்கவும்.
புளியை கரைத்து புளிக்கரைசல் தயார் செய்து வைக்கவும், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, பூண்டும் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் புளிக்கரைசல் மற்றும் கொள்ளு வேக வைத்த நீரையும் சேர்த்து ஊற்றவும்.
பிறகு ஏற்க்கனவே வதக்கி வைத்த தனியா,சீரகம், மிளகு,மிளகாய் தூள் யையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு குறைந்த தீயில் வைக்கவும். ரசம் நன்கு கொதித்ததும் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சுவையான கொள்ளு ரசம் தயார்!
Leave a Comment