உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுத்தானிய வகைகளில் கேழ்வரகும் ஒன்று, கேழ்வரகை வைத்து எளிமையாக புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு = 1/2 கிலோ
ஏலக்காய் தூள் = 2 ஸ்பூன்
நெய் = 5 ஸ்பூன்
சர்க்கரை = 400 கிராம்
தேங்காய் = 1 பீஸ்
முதலில் கேழ்வரகுவை சுத்தம் செய்து, மாவாக அரைத்து வைக்கவும். இந்த மாவில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை சல்லடையில் சலித்து உதிரியாக வைக்கவும்.
இந்த மாவுடன், சர்க்கரை, ஏலக்காய் தூள், கொஞ்சம் நெய் ஊற்றி நன்கு கிளறி இட்லி தட்டில் போட்டு நன்கு வேகவைக்கவும். மாவு கலவை நன்கு வெந்ததும் துருவிய தேங்காயை தூவி பரிமாறலாம்.
தேவையெனில் வெந்த மாவு கலவையை ஒரு உருளை அச்சில் வைத்து அழுத்தி உருளை வடிவில் செய்தும் பரிமாறலாம். புட்டு அச்சு இருப்பின் அதில் வைத்து வேகவைக்கலாம். இப்போது சுட சுட கேழ்வரகு புட்டு தயார்!