சத்துள்ள காய்கறிகளை பயன்படுத்தி ஈசியாக, ருசியான வெஜிடபிள் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்
பீன்ஸ்
முட்டைகோஸ் } = தலா 50 கிராம் அளவு
மிளகு தூள்
காலிபிளவர்
ஸ்வீட்க்கார்ன்
காளான்
உப்பு = தேவையான அளவு
கொழுப்பு நீக்கிய பால் = 2 ஸ்பூன்
முதலில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் ஆகியவற்றை தேவையான அளவில் நறுக்கி வைக்கவும். நறுக்கி வைத்த காய்கறிகளை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
வேகவைத்த காய்கறிகளை, சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொதிக்க வைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய காளான், ஸ்வீட்க்கார்ன் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். இறுதியில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து கலக்கவும். மல்லிதழை களை கிள்ளிபோட்டு இறக்கவும்.
இப்போது சத்தான, ருசியான வெஜிடபிள் சூப் ரெடி!
Leave a Comment