அருமையான, சுவையான பருப்பு சாதம் சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கரிசி = 1/4 கிலோ
கேரட், உருளை, பீன்ஸ்,
காலிபிளவர், வாழைக்காய் = 1/4 கிலோ
அனைத்தும் சேர்த்து
கடுகு = 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு = 1/2 ஸ்பூன்
சீரகம் = 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை = சின்ன கொத்து
புளி = சிறிய உருண்டை
எலுமிச்சை சாறு = 3 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
துவரம் பருப்பு = 200 கிராம்
முருங்கை கீரை = 1 சின்ன கட்டு
கொத்தமல்லி இலை = 1 சின்ன கட்டு
உப்பு = தேவையான அளவு
சாம்பார் தூள் = 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
முதலில் காய்கறிகளை சம அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.புளியை கரைத்து புளிக்கரைசலை தயார் செய்யவும். பருப்பை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
வேக வைத்த பருப்புடன் நறுக்கிய காய்கறிகள், சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அரிசியை கழுவி 5 மடங்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு தனியாக வேக வைக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த காய்கறிகள் மற்றும் சுத்தம் செய்த முருங்கை கீரையும் சேர்த்து குறைந்த தீயில் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், இதனுடன் புளிக்கரைசல், கொத்தமல்லி இலை, 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும். இந்த கலவையை குறைந்த தீயில் வைத்த அரிசி கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். சாதம் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்ந்தார் போல இருக்கட்டும். மேலே கொத்தமல்லி தலை தூவி பரிமாறவும்.
இப்போது சுவையான பருப்பு சாதம் தயார்!!