தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறித் துண்டுகள் – 500 கிராம்
- தயிர் – 200 மில்லி லிட்டர்
- பட்டை – 2 துண்டு
- இஞ்சி – 2 அங்குலம்
- பிரியாணி இலை – 2 துண்டு
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- கரம்மஸாலாத்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 4
- சிகப்பு மிளகாய் – 4
- கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
- கொத்தமல்லி இலை – 1 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- பூண்டு – 6 பல்
- ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்
- Advertisement -
கறித்துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
- Advertisement -
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் (Bowl) தயிர், பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு, கறித்துண்டுகள் இவற்றைப் போட்டு கலந்து 1 மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் இவற்றை நடுவே கீறி வைத்துக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி ஊற வைத்துள்ள கறித்துண்டுகளை (தயிருடன்) போட்டு மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஏலக்காய் பொடி போட்டுக் கிளறி விடவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றவும்.
தயிர் மற்றும் தண்ணீர் வற்றி, கறித்துண்டுகள் வெந்ததும் சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் ஆனபின் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.