நாம் அனைவரும் சேமியாவை வைத்து பாயாசம், கிச்சடி, கேசரி போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டிருப்போம் ஆனால் சேமியாவை வைத்து மிக்சர் செய்வது எப்படி.? என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
சேமியா – 200 கிராம்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
அரிசிமாவு – 1/2 கப்
சோளமாவு(cornflour) – 1/2 கப்
எண்ணெய் – சேமியாவை பொறிக்க தேவையான அளவு
பொட்டுக்கடலை – 1/4 கப்
பூண்டுப்பல் – 8
வேர்க்கடலை – 1/4 கப்
கருவேப்பிலை – 1/4 கப்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைக்கவும். அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். அதில் சேமியாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் வெண்ணெயை சேர்த்து இந்த தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 200 கிராம் சேமியாவை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும். அது நன்கு வெந்தவுடன் அதனை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1/2 கப் அரிசிமாவு மற்றும் 1/2 கப் சோளமாவு(cornflour) சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்து வடிகட்டி வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதே எண்ணெயில் 8 பூண்டுபல், 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 கப் கருவேப்பிலை இவை அனைத்தையும் பொரித்து எடுத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் நாம் முன்பு வறுத்து எடுத்து வைத்திருந்த சேமியாவுடன் 1/4 கப் பொட்டுக்கடலை, நாம் வறுத்து வைத்திருந்த 8 பூண்டுப்பல் , 1/4 கப் வேர்க்கடலை மற்றும் 1/4 கப் கருவேப்பிலை, 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டால் சுவையான சேமியா மிக்சர் ரெடியாகிவிட்டது.