இட்லி, தோசைக்கு காரமான, சுவையான வெங்காய பூண்டு சட்னி ஈசியாக செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் = 1 கப்பு
பூண்டு = 2 முழுவதும்
தக்காளி = 2 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
முதலில் வெங்காயத்தை தோலை உரித்து சுத்தம் செய்யவும், வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இவை வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும், கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் போட்டு கிளறவும்.
இப்போது சுவையான வெங்காய பூண்டு சட்னி தயார்!!
