காலிபிளவர் மற்றும் பட்டாணியை வைத்து பூரி சப்பாத்திக்கு அருமையான குருமா செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
காளிபிளவர் = 1 பீஸ்
பச்சை பட்டாணி = 50 கிராம்
எண்ணெய் = தேவையான அளவு
பட்டை, கிராம்பு = சிறிதளவு
பெரிய வெங்காயம் = 1 பீஸ்
கருவேப்பிலை = சின்ன கொத்து
தேங்காய் துருவல் = 1/2 கப்பு
தக்காளி = 2 பீஸ்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
மல்லி தூள் = 2 ஸ்பூன்
சீரகதூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி தழை = சின்ன கொத்து
சோம்பு = 1 ஸ்பூன்
முதலில் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் வரை ஊறவைத்து, குக்கரில் 2 அல்லது 3 விசில் வைத்து வேகவைத்து, அதன் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். காலிபிளவரை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் வைத்து பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை, பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இவை வதங்கியதும் நறுக்கிய காலிபிளவர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
காலிபிளவர் வெந்ததும், வேகவைத்த பட்டாணி, மிளகாய்தூள், சீராக தூள், மல்லிதூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சுட சுட காலிபிளவர் குருமா தயார்!!