பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு தான் பூரி. தினமும் காலையில் இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா..? சற்று வித்தியாசமான, அதே சமயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான காலை உணவை தயாரிக்கலாம். அனைவருமே வித விதமான பூரி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து அல்டிமேட் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூரி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
ரவை – 1/4 கப்
உப்பு – 1 தேவையான அளவு
மிளகாய் தூள் – 1/4 தே. கரண்டி
எண்ணெய் – 1 தே. கரண்டி
சமையல் சோடா – 1 தே. கரண்டி
புதினா – 4 இலை
அரைத்த தக்காளி – 1 கப்
சீரகம் – 1 தே. கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், சமையல் சோடா, புதினா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி கலவையை சேர்த்து மிதமான கெட்டியான பூரி மாவு பதத்துக்கு தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
10 நிமிடம் மாவை ஊறவிட்டு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தேய்த்து எடுத்துக்ககொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரியை போட்டு எடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடும்பும் வகையில் சுவையான தக்காளி பூரி தயார்.