தக்காளி குருமா இட்லி, தோசை, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று. 15 நிமிடங்களில் சுலபமாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2
தக்காளி – 2
சாம்பார் பொடி – 3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் துருவல் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
செய்முறை:
தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
தக்காளி குழைந்தவுடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, 1 & 1/2 தண்ணீர் சேர்த்து, உப்பு சரி பார்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh