சிக்கன் மட்டன் க்கு மாற்றாக, காடையை வைத்து ருசியான காடை வறுவல் செய்யும் முறை..
தேவையான பொருட்கள்:
காடை = 10 பீஸ்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
தேங்காய் துருவல் = 1 கப்பு
நெய் = 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
கசகசா = 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை = 1 ஸ்பூன்
தயிர் = 200 மில்லி
மிளகாய் = 10 பீஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 2 ஸ்பூன்
வெங்காயம் = 2 பீஸ்
ஏலக்காய் = 5 பீஸ்
இலவங்கம் = 2 பீஸ்
கிராம்பு = 3 பீஸ்
செய்முறை:
முதலில் காடையின் சிறகுகளை அகற்றி, சுத்தம் செய்யவும். பிறகு தேவைக்கேற்ப்ப கடையை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மஞ்சள் தூள், உப்பு, தயிர் ஆகிய மூன்றையும் சேர்த்து, அதில் நறுக்கிய காடையில் போட்டு நன்கு பிசைந்து 1/2 மணி நேரம் வரை அப்படியே ஊற வைக்கவும்.
பிறகு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், ஏலக்காய், தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, இதனுடன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஊற்றி கலக்கவும், இந்த கலவையை ஏற்க்கனவே ஊறவைத்த காடையில் பூசி வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும் மசாலா பூசிய காடையை நெய்யில் போட்டு கிளறவும். காடையின் ஈரம் சுண்டும் வரை அப்படியே அடுப்பில் வைக்கவும். சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, ஏலக்காய், கிராம்பு, ஆகியவற்றை பொடியாக அரைத்து கடாயில் உள்ள காடையில் தூவி லேசாக கிளறவும். காடை முழுவதும் வெந்ததும், கீழே இறக்கி நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது கார சாரமான காடை வறுவல் தயார்!!
