IMG 20230103 113443

இட்லி, தோசைக்கு சுவையான புதினா சட்னி!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில் ஒன்றான புதினா வைத்து இட்லி, தோசைக்கு சுவையான புதினா சட்னி செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

புதினா = 1 கட்டு
உளுத்தம் பருப்பு = 1 கைப்பிடி
உப்பு = தேவையான அளவு
நல்லெண்ணெய் = தாளிக்க
கடுகு = 1 ஸ்பூன்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
புளி = 1 சிறிய உருண்டை

செய்முறை:

முதலில் புதினாவை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி வைக்கவும். இதனுடன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் வைத்து அடுப்பில் நன்றாக வதக்கவும். வதக்கியவற்றை ஆறவைத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த புதினா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

இப்போது சுவையான புதினா சட்னி ரெடி!