பச்சைப்பயிரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது, குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்திற்க்கு ஏற்றது. இத்தகையை பச்சைப்பயிறு வைத்து தோசை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
பச்சைப்பயிறு = 2 கப்பு
பச்சைமிளகாய் = 4 பீஸ்
உப்பு = தேவையான அளவு
சீரகம் = 2 ஸ்பூன்
இஞ்சி = 1 பீஸ்
முதலில் பச்சைப்பயிறை தண்ணீரில் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய் யை பொடியாக நறுக்கி வைக்கவும். நன்கு ஊரியதும் பயிரை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துவைக்கவும். அரைத்த மாவுடன் நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம்வரை அப்படியே வைக்கவும்.
மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தோசைமாவு பாதத்தில் வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, பச்சைப்பயிறு மாவு கலவையை தோசை கல்லில் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்க்கு கார சட்னி அருமையாக இருக்கும். இப்போது ருசியான பச்சைப்பயிறு தோசை தயார்!