26.1 C
Chennai

பருப்பு உருண்டை குழம்பு செய்து இருக்கிறீர்களா.. இதோ செய்முறை உங்களுக்காக..!

- Advertisement -

கடலை பருப்பை வைத்து எளிமையாக பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

- Advertisement -

கடலை பருப்பு = 1 கப்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
புளி = ஒரு சிறிய உருண்டை
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
தனியா தூள் = 2 ஸ்பூன்
வெங்காயம் = 200 கிராம்
பச்சைமிளகாய் = 2 பீஸ்
தக்காளி = 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
தேங்காய் = 1/4 மூடி
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
கடுகு = 1 ஸ்பூன்

செய்முறை:

- Advertisement -

முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு நீரை வடித்து, கொஞ்சம் கொற கொறப்பாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும், இதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- Advertisement -

குழம்பு கொதித்து வரும்போது, உருட்டி வைத்த கடலைப்பருப்பு உருண்டைகளை உடையாமல் போடவும், பருப்பு உருண்டைகள் வெந்த பிறகு புளிக்கரைசல் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்!

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + three =

error: