சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோளமாவு – 100 கிராம்
சீனி – 200 கிராம்
நெய் – 3 மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 15
கேசரி கலர் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 200 மில்லி
செய்முறை
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும். சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
அதே நான்ஸ்டிக் கடாயில் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான சோளமாவு அல்வா ரெடி.
