பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பணியாரத்தை முட்டை போட்டு செய்யும் பொழுது ரொம்ப சூப்பராக இருக்கும். நான்வெஜ் பிரியர்களுக்கு இந்த சுவையான முட்டை பணியாரம் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – ஒரு கப்
முட்டை – 2
சின்ன வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
கடுகு – தாளிக்க
உளுத்தம்பருப்பு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குழிப்பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் முட்டை கலந்த மாவுக்கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்ற வேண்டும். மாவு வெந்ததும் பிரட்டி எடுத்தால் சுவையான முட்டைப் பணியாரம் தயார்.
இதனை செய்து கொடுத்தால் குழந்தைகள் காலை உணவை தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.