தமிழ்நாடு

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் – நாளை வெளியீடு!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தொழில் நிறுவன பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்தது. மேலும் பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2021 – 2022ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் கடந்த ஜூலை 26 ம் தேதி பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஆகஸ்ட் 27ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. நடப்பு ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலம் சமர்ப்பித்தனர். இந்த சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அரசு தேர்வுத்துறை சரிபார்த்தது.

அதனை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 17ம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரவரிசை பட்டியல் நாளை (14.09.2021) இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலுடன் சேர்த்து, மாணவர்களின் ஜாதி வாரியான மற்றும் சிறப்பு தகுதி ஒதுக்கீடுகள் அடிப்படையில், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. எந்த கட் ஆப் மாணவர்கள், எந்த நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் போன்ற விவரங்களும் நாளை அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க:  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: