வேலைவாய்ப்பு

NFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sr. Consultant (E0-E3) and Consultant(Workman Cadre) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள்

NFL நிறுவனத்தில் Sr. Consultant (E0-E3) and Consultant (Workman Cadre) ஆகிய பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

பதிவு செய்வோர் 01/07/1957 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Production/ Electrical/ Instrumentation பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

அவற்றுடன் பணியில் அதிக முன் ணைபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்

தேர்வாகும் பணியாளர்களுக்கு 50% of Last drawn Pay(Basic Pay +DA) என்ற முறையில் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை 

பதிவு செய்வோர் அனைவரும் Interview சோதனை மூலமாக மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை 

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification – https://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/Advertisement.pdf

Application Form – https://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/Application%20Performa.pdf

Official Site – https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=category&id=52&Itemid=146


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ,81,100/- CSIR NCL நிறுவன வேலைவாய்ப்பு!!
Back to top button
error: