வேலைவாய்ப்பு

ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இயங்கி வரும் நகரம் & நாட்டு திட்டமிடல் துறை – காரைக்கால் திட்ட ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Programming And Systems Administration Assistant பதவிக்காக 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனத்தின் பெயர் – தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)                        பணியின் பெயர் – Programming And Systems Administration Assistant                பணியிடங்கள் – 2                                       கடைசி தேதி – As Soon                             விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Programming And Systems Administration Assistant பணிகளை நிரப்ப 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் NCVT துறையிலும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Operator and Programming Assistant போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை விவரம் :

Apprenticeship பணிக்காக குறைந்தபட்சம் ரூ 7,266 /- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி காலம் :

இந்த Apprenticeship Training க்கான வேலை பயிற்சி காலம் 12 மாதங்கள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் www.apprenticeshipindia.org. என்ற இணையதளத்தின் மூலம் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ரூ.2,16,300/- ஊதியத்தில் தமிழக அரசு மின்துறை வேலைவாய்ப்பு!!
Back to top button
error: