வேலைவாய்ப்பு

ரூ.20,000/- சம்பளத்தில் சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவாய்ப்பு!!

சிவகங்கை அரசு காசநோய் மையம் ஆனது அங்கு காலியாக உள்ள Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதி படைத்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – TN Govt Social Department
பணியின் பெயர் – Lab Technician, District Project Coordinator
பணியிடங்கள் – 04
கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு:

சிவகங்கை அரசு காசநோய் மையத்தில் Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு என 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Lab Technician, District Project Coordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • District Project Coordinator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBA/ M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – 12th தேர்ச்சியுடன் DMLT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 30.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Joint Secretary, District TB Centre, Old Government Hospital Campus, Sivaganga-630561.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ICMR-NIE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
Back to top button
error: