காலிப்பணியிடம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
Van Cleaner பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் நல்ல உடல் தகுதி உடையவராக இருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
BC / MBC – 02 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1 படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.05.2022 என்ற கடைசி நாள் மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.
தபால் முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருவண்ணாமலை.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh