வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Staff-Car Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – NIELIT
பணியின் பெயர் – Staff-Car Driver
பணியிடங்கள் – 12
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

NIELIT நிறுவனத்தில் Staff-Car Driver பதவிக்காக மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவரின் வயது வரம்பானது (14.09.2021 அன்று) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியமானதாகும்.
  • சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Staff-Car Driver பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

  • Written Test (Objective Type)
  • Skill Test

விண்ணப்பக்கட்டணம் :

  • SC/ ST/ Women candidates/ Ex-Servicemen – ரூ. 150/-
  • General மற்றும் பிற – ரூ. 300/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் இப்பதவிக்கு வரும் 14.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://register-delhi.nielit.gov.in/PDF/FinalDetailedAdvt.pdf

Apply Online – https://register-delhi.nielit.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: