வேலைவாய்ப்பு

EPFOல் வேலைவாய்ப்பு; மாதம் ரூ.39,000 வரை சம்பளம்!

இ.பி.எஃப்.ஒ (EPFO) Employee Provident Fund Organization நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

இந்த அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டிற்கான இ.பி.எஃப்.ஒ ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 98 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.epfindia.gov.in என்ற இ.பி.எஃப்.ஒவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

நிறுவனத்தின் பெயர்: Employee Provident Fund Organization

காலியிடங்களின் எண்ணிக்கை: 98

பணியின் விவரங்கள்:

  • துணை இயக்குனர் (Deputy Director) – 13
  • உதவி இயக்குனர் (Assistant Director) – 25
  • உதவி ஆடிட்டர் அதிகாரி (Assistant Audit Officer) – 26
  • ஆடிட்டர் அதிகாரி (Auditor) – 34

மொத்தம் – 98

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விகிதம்:

துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் – ரூ. 15,600 முதல் 39,100 வரை மாத சம்பளம்

உதவி ஆடிட்டர் அதிகாரி மற்றும் ஆடிட்டர் அதிகாரி – ரூ. 9,300 முதல் 34,800 வரை மாத சம்பளம்

விண்ணப்பிக்க இறுதி தேதி: 23 அக்டோபர் 2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: