வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Project Engineer பணிகளுக்கு காலியாக உள்ள இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Project Engineer பணிகளுக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது

UR/ EWS – 28 வயது

OBC-31 வயது

SC/ST- 33 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.Tech / B.Sc Engineering அல்லது அதற்கு இணையான பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2 வருட பணி முன்னனுபவம் உள்ளவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

Project Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். PWD, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.35,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 24.12.2021 தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Detailed%20English%20Advertisement-03-12-2021.pdf

Application Form – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Application%20Form-03-12-2021.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் Exim வங்கியில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: