வேலைவாய்ப்பு

ரூ.65,000/- சம்பளத்தில் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேளாண் காப்பீட்டு நிறுவனம், இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Management Trainee மற்றும் Hindi Officer பதவிகளுக்கான 31 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி குறித்த முழு விவரங்கள் கீழே விவரித்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee பணிக்கு 30 பணியிடங்களும், Hindi Officer பணிக்கு 01 பணியிடமும் மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

கல்வி தகுதி:

Management Trainee – Agriculture Sciences, Information Technology, Legal, Accounts, B. Sc. (Agriculture), BE/B. Tech, Graduate in Law, B.Com, Chartered accountants படைப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Hindi Officer – விண்ணப்பதாரர்கள் Post Graduate Master’s Degree in Hindi படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்

Management Trainee – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு முதலாம் ஆண்டு ரூ.40,000/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.42,000/- வழங்கப்படுகிறது.

Hindi Officer – இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ. 65,000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PwBD – ரூ.200/-
  • மற்றவர்கள் – ரூ.1000/-

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி முடியும் முன் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பங்களை 13.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification – https://www.aicofindia.com/AICEng/General_Documents/Advertisements/Advertisement_Eng.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.48,000/- Prasar Bharati நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: