காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) காலியாக உள்ள Security Officer பணிக்கு என 06 இடமும், Officer பணிக்கு என 04 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
- Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Bachelor, Master Degree -யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Security Officer பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- OBC(NCL) பிரிவினருக்கு 03 ஆண்டுகள் மற்றும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Officer, Security Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 24.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh