வேலைவாய்ப்பு

அடிதூள்! மத்திய அரசில் 10/ 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 77 காலிப்பணியிடங்கள்!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் HQ Infantry School பணியகத்தில் இருந்து ஒரு புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Accountant, Draughtsman, LDC, Carpenter, Translator, Storekeeper, Painter, Cook, Supervisor, Artist, MTS, Barber & Other பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதற்கான முழு விவரங்களையும் கேலி பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் – Ministry of Defense
பணியின் பெயர் – Accountant, Draughtsman, LDC, Carpenter, Translator, Storekeeper, Painter, Cook, Supervisor, Artist, MTS, Barber & Other
பணியிடங்கள் – 77
கடைசி தேதி – 12.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

Accountant, Draughtsman, LDC, Carpenter, Translator, Storekeeper, Painter, Cook, Supervisor, Artist, MTS, Barber & Other பணிகளுக்கு மொத்தமாக 77 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25- 27 வயது வரை வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Written Test & Physical/ Practical/ Skill/ Typing Test ஆகிய செயல்முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரிகள் – ரூ.50/-
SC/ ST/ PWD/ EXSM விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 12.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.22,000/- சம்பளம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!!!
Back to top button
error: