வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Satluj Jal Vidyut Nigam (SJVN) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Field Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – SJVN Limited
பணியின் பெயர் – Field Engineer
பணியிடங்கள் – 8
கடைசி தேதி – 20.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு:

Field Engineer பணிகளுக்கு என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Electrical/ Electrical & Electronics Engineering/ Mechanical Engineering ஆகிய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.66,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 01.09.2021 அன்று முதல் 20.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலினை 11.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – https://sjvnindia.com/UploadFiles/JobUploadedFile/1250/Advt.%20No.%2096-2021%20detailed.pdf

Apply Online – https://sjvn.nic.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! ரூ.54,100/- ஊதியம் DRDO வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: