உலகம்

42% பெண் ஊழியர்களுக்கு நெஸ்லே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – புதிய தகவல்!!

உலகின் முன்னணி உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில் உள்ள தனது கிளை அலுவலகங்களில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் மட்டும் 42% பெண்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ள இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகளவில் சுமார் 186 நாடுகளில் தனது கிளை அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலகளாவிய நாடுகள் துவங்கி முதல் உள்ளூர் மக்கள் வரை விரும்பும் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பிராண்டுகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, நெஸ்லே நிறுவனத்தின் இந்தியாவின் உள்ள கிளை அலுவலக பணியாளர்களில் சுமார் 23 சதவீதம் பெண்கள் வேலை செய்து வருவதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய அலுவலகங்களில் 15 முதல் 16 சதவிகித ஊழியர்கள் தான் பெண்களாக இருந்தனர். நெஸ்லே நிறுவனத்தில் பாலின வேறுபாடு முயற்சிகளின் ஒரு பகுதியாக தனது பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறதாகவும், தற்போது, இந்திய பணியாளர்களில் சுமார் 23 சதவிகிதம் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது 7,700க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சுமார் எட்டு ஆலைகளை இயக்கி வரும் நெஸ்லே நிறுவனம் விரைவில் ஒன்பதாவது நிறுவனத்தை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன் கூறுகையில், ‘கடந்த 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆட்சேர்ப்புகளிலும் 42 சதவிகிதம் பெண்கள் காணப்பட்டனர். இது இந்த ஆண்டும் தொடரும்.

இப்போது குஜராத்தின் சனந்தில் அமைக்கப்பட்டுள்ள நெஸ்லேயின் புதிய ஆலையில், பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மேகி தயாரிப்பில் 62 சதவீத ஊழியர்கள் பெண்களாக இருப்பார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். தவிர, தற்போதுள்ள ஆலைகளின் திறனை அதிகரிக்க நெஸ்லே, சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்வதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 22.10 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!
Back to top button
error: