இந்தியா

புதிய நிதியாண்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு – பிரபல Keka நிறுவனம் அறிவிப்பு!!

முன்னணி HRMS மற்றும் ஊதிய மென்பொருள் வழங்குநரான கேகா நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்புகளின் படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 150 முதல் 200 புதிய பணியமர்த்தலை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

பிரபல Keka நிறுவனத்தில் தற்போதுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் விதத்தில் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் 200 புதிய ஊழியர்களை பணியமர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது மனிதவளம் மிக்க உலகில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வளர்ந்து வரும் கேகா நிறுவனம் தனது ஊழியர் அளவை விரிவாக்க வழி வகுத்துள்ளது. இந்த நடவடிக்கை அதன் தயாரிப்பின் தொழில்நுட்ப உதவியை விரிவுபடுத்தும் என எதிர்பார்த்துள்ள அந்நிறுவனம், மென்பொருளை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்கள் மனதில் உறுதியாக இருப்பதற்கும் ஒரு வலுவான தொழில்நுட்ப வசதியுள்ள வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த புதிய பணியமர்த்தலின் கீழ், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள பல்வேறு துறைகளுக்கு புதியவர்களையும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும் விண்ணப்பிக்க இது அனுமதிக்கும். தொழில்நுட்பம் உட்பட பல தொழில்நுட்பமல்லாத பணிக்குமான ஊழியர்கள் கேகா மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதில் தயாரிப்பு, வாடிக்கையாளர், விற்பனை, HR மற்றும் பல துறைகள் அடங்கும். இவற்றில் 2022 ஆம் ஆண்டு வரை வெவ்வேறு பிரிவுகளில் தோராயமாக எடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையின் படி, விற்பனை – 40 வேலை வாய்ப்புகள், டெக்- 60 வேலை வாய்ப்புகள், வாடிக்கையாளர் சேவை – 60 வேலை வாய்ப்புகள், மற்ற துறைகள் – 40 உள்ளிட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இவை கல்லூரி வேலைவாய்ப்புகள் மூலம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக கேகாவின் நிறுவனர் விஜய் இளமஞ்சிலி கூறுகையில், ‘இந்த வேலைவாய்ப்புகள் அடுத்த வளர்ச்சி கட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். கற்றறிந்த மற்றும் திறமையான ஊழியர்களைச் சேர்ப்பதன் மூலம் ஆழமான தொழில்நுட்ப வசதியைக் கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தற்போதுள்ள மென்பொருளில் உள்ள இடைமுகம், எங்கள் ஊழியர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விரிவாக்கம் நமது வளர்ச்சியின் பார்வையை துரிதப்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 0 முதல் 3 வருட அனுபவத்துடன் கிட்டத்தட்ட 65 சதவிகித ஃப்ரெஷர்களை வேலைக்கு அமர்த்துவதில் கேகா உறுதியாக உள்ளது. அடுத்ததாக 20% வரை 2 முதல் 5 வருட அனுபவம் கொண்ட நடுத்தர அளவிலான நிபுணர்களை இந்நிறுவனம் வேலைக்கு அமர்த்தும். மீதமுள்ள 15 சதவிகிதத்தை மூத்த நிலை தலைமைப் பொறுப்புகளுக்கான இடங்கள் நிரப்படப்பட உள்ளது. இதுவரை கேகா நிறுவனம் பயிற்சியாளர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியிலும் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் எந்தவித பணிநீக்கமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  SBI வாடிக்கையாளர்கள் செப்.30 வரை கட்டணமின்றி புதுப்பிக்கலாம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: