காலிப்பணியிடங்கள்:
வெளியாகிய அறிவிப்பின் படி, Project Technician (III) பணிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Project Technician (II) பணிக்கு 2 பணியிடங்கள் என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
Project Technician (III) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் 2 ஆண்டு Diploma in Medical Laboratory Technology (DMLT) முடித்திருக்க வேண்டும்.
Project Technician (II) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் B.Sc. (MLT/Life Sciences) முடித்திருந்தால் 3 ஆண்டுகள் அனுபவமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் Project Technician (II) பணிக்கு ரூ.17,000 என்றும், Project Technician (III) பணிக்கு ரூ.18,000 என்றும், ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் (Written Test / Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும்படி, அனுப்பவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh