வேலைவாய்ப்பு

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional-II, Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional-II, Office Assistant பணிகளுக்கென 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Young Professional-II – 18 பணியிடங்கள்
Office Assistant – 01 பணியிடங்கள்
மொத்தம் – 19 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

Young Professional-II – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் PG, M.Sc, Master Degree, MCA, MBA, B.Tech முடித்திருக்க வேண்டும்.

Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 21.12.2021, 23.12.2021, 27.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://drive.google.com/file/d/14sdrw7XbRJSreUcFz5i04l2uScV-Y3pd/view?usp=sharing


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: