காலிப்பணியிடங்கள்:
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Administrative Officer – 01
- Junior Accounts Officer – 03
- Junior Accountant – 02
கல்வி தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
அனுபவம்:
- Administrative Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 2 வருடம் முதல் 3 வருடம் வரை Level 7, 8 படி ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Junior Accounts Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 6 வருடம் வரை Level 5 படி ஊதியம் பெற்றவர்கள் மற்றும் Finance, Audit Work போன்ற துறைகளில் 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Junior Accountant பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 5 வருடம் வரை Level 4 படி ஊதியம் பெற்றவர்கள் மற்றும் Cash Account, Budget Work போன்ற துறைகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 10.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Administrative Office பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 10 படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Junior Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 6 படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Junior Accountant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 5 படி ரூ.29,200 முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 10.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh