தமிழகத்துக்கு ஏப்ரலில் தேர்தல்..
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் 2 நாட்களாக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடத்தியது.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை தொடர்ந்து, புதுவையிலும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதிகாரிகள் டெல்லி சென்ற பின்னர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், வாக்கு எண்ணிக்கையை மே 10ஆம் தேதிக்குள் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.