இந்தியா

பவானிபூர் சட்டசபை தொகுதியில் நாளை இடைத்தேர்தல்.. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்திய தேர்தல் ஆணையம்!

மேற்குவங்கத்தில் உள்ள பவானிபூர் சட்டசபை தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்லுக்‍கான வாக்‍குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தலைவர்களின் சூறாவளிப் பிரச்சாரப் பயணங்களின் போது பாஜக தலைவர்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதாக அக்‍கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பவானிப்பூர் தொகுதியில் மத்திய போலீஸ் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது.

இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாக்‍குப் பதிவு முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்‍கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேசமயம் நாளை திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்..!
Back to top button
error: