தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சட்டப்பேரவை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும், எவ்வித பாரபட்சம் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வாக்குக்கு பணம், பரிசு பொருள் விநியோகிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுப்படும் என்றும், கேரளாவிற்கும் சென்று ஆலோசித்த பிறகு, வரும் பிப்ரவரி 16-ம் தேதி மத்திய வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஐந்து மாநில தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் வேட்பாளர் செலவு தொகை, 20 லட்சத்திலிருந்து 22 லட்சமாக அதிகரித்துள்ளதாக திரு.சுனில் அரோரோ தெரிவித்தார்.