தமிழ்நாடு

என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தது சசிகலா அல்ல.. எடப்பாடி பேட்டி..

ஆங்கில நாளிதழ் இந்துவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்..

கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக உங்களை தேர்வு செய்தது சசிகலாதான் என்று கூறப்பட்டது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் கட்சியை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?

என்னை முதல்வராக தேர்வு செய்தது சசிகலா அல்ல. அந்த நெருக்கடியான சூழலில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் என்னை ஆதரித்ததால் முதல்வரானேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது வைத்திருந்த நம்பிக்கையை அனைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் நன்கு அறிவர். கட்சிக்கும், தலைமைக்கும் உண்மையாக இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்.

ஜெயலலிதாவின் ஆன்மா என்னுடன் இருந்து ஆட்சியை நிறைவு செய்ய வழிகாட்டியதாக நம்புகிறேன் இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.. வரும் 27ம்தேதி சசிகலா விடுதலையாகும் நிலையில் எடப்பாடியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!