வேலைவாய்ப்பு

ECIL நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு Technical Officer பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெற வாழ்த்துகிறோம்.

நிறுவனம் – ECIL
பணியின் பெயர் – Technical Officer
பணியிடங்கள் – 08
Interview தேதி – 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

Technical Officer பணிகளுக்கு என 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics & Communication/Computer Science/Information Technology ஆகிய பாடங்களில் BE/B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.23,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அவரவர்களின் மதிப்பெண் அடிப்படையிலும் நேர்காணல் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் இது குறித்த தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification – https://careers.ecil.co.in/app/Advt_27_2021.pdf

Official Link – https://careers.ecil.co.in/advt2721.php

Official Site – http://www.ecil.co.in/

இதையும் படிங்க:  IOCL நிறுவனத்தில் 480 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: