வேலைவாய்ப்பு

ECHS ஈரோடு வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ஈரோடு மாவட்ட முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்ட (ECHS) அலுவலகத்தில் இருந்து Pharmacist, Lab Technician, Doctor, Attendant, Safaiwala ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்காக தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் – Pharmacist, Lab Technician, Doctor, Attendant, Safaiwala
பணியிடங்கள் – 05
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Pharmacist, Lab Technician, Doctor, Attendant, Safaiwala ஆகிய பணியிடங்களுக்கு என 05 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Medical Officer – MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – B.Pharm/ D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது UG (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Safaiwala & Female Attendant – தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 01.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Officer In Charge, Station Headquarters (ECHS Cell), Air Force Station Sulur, Coimbatore-641401.

இதையும் படிங்க:  ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: