தமிழ்நாடு

கொரோனா பரவல் எதிரொலி.. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட மெரினா கடற்கரை..!

அரசு விடுமுறை தினமான இன்று, தமிழக அரசின் கொரோனா தடை உத்தரவால் சென்னை மெரினா கடற்கரை, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்திருந்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடவும் தமிழக அரசு தடை விதித்தது.

அதன்படி, யுகாதி புத்தாண்டு தினமான இன்று அரசு விடுமுறை என்பதால் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலையில் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், காமராஜர் சாலை நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: