ஆரோக்கியம்தமிழ்நாடு

நல்ல செரிமானத்திற்கு இந்த பழத்தை சாப்பிட்டால் உடனே சரியாகுமாம்!

நட்சத்திர பழத்தின் தாயகம் மலேசியா என்பதால் இந்தியாவில் மிக குறைந்தளவே பயிரிடப் படுகின்றன. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மார், இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

இப்பழமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது. 6-9 மீ உயரம் வரை வளரும் இயல்புடைய இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும்.

இது ‘ஆக்சாலிடாசியே’ (Oxalidaceae) குடும்பத்தைச் சேர்ந்த மரம். குளிர்ந்த மலைப்பகுதிகளில் செழித்து வளரும். சமவெளிப் பகுதிகளில் வளராது.

மரம் 30 அடி உயரம் வரை வளரும். அதிகக் கிளைகளுடன் பசுமையாக இருக்கும். கருநீல நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

மரத்தை பூச்சிகள் தாக்காது. ஆண்டு முழுவதும் பூத்து, காய்க்கக்கூடியவை. காய், நீண்ட வடிவத்தில் பசுமை நிறத்துடன் இருக்கும். பழம், மெழுகு பூசியது போன்று, வழவழப்புடன் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

நட்சத்திரப் பழம் ஒரு அரிய பொருள், ஆனால் அதிக ஊட்டச்சத்து மதிப்புடையது, மேலும் சமையலறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது ஒரு சிறந்த சாறு, ஸ்மூத்தி அல்லது ஷேக் போன்ற உணவை உருவாக்குகிறது, அல்லது நீங்கள் அதை பச்சையாக சாப்பிடலாம்.

காப்பி செடியின் ஊடு பயிராக இம்மரம் வளர்க்கப்படுகிறது. இதுகுறித்து கும்பரையூர் விவசாயிகள் கூறுகையில், ‘‘ஒரு மரத்தில் இருந்து ஒரு ஆண்டிற்கு 75 கிலோ முதல் 100 கிலோ வரை ஸ்டார் ப்ரூட் பழங்கள் எடுக்கலாம். ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இப்பழத்திற்கு சீசனாகும். இந்த மரத்திற்கு பராமரிப்பு அதிகம் தேவை இல்லை என்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது’’ என்றனர்.

அடங்கியுள்ள சத்துக்கள்

இப்பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ,சி,இ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃளோவின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, நார்ச்சத்து, நீர்சத்து, குறைந்த அளவு எரிசக்தி ஆகியவையும் காணப்படுகின்றன.

நல்ல செரிமானத்திற்கு

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு நார்ச்சத்து உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இப்பழத்தினை உண்டு மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள்

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடவே கூடாது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, விக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்பால் சுரக்க

பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது. எனவே பிரசவித்த தாய்மார்கள் இப்பழத்தினை உண்டு பால்சுரப்பிற்கு இயற்கை வழியில் நிவாரணம் பெறலாம்.

உடல் எடை குறைப்பிற்கு

இப்பழத்தில் அதிகம் உள்ள நார்சத்து வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகிறது. நீர்சத்தானது உடல் எடை குறைப்பதற்கான உடற்பயிற்சியின்போது உடலுக்கு தேவையான நீரினை வழங்குகிறது.

இப்பழத்தில் உள்ள தாது உப்புக்கள் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி உடலினை பலப்படுத்துகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்டு நல்ல பலனைப் பெறலாம்.

Back to top button
error: Content is protected !!