ஆரோக்கியம்தமிழ்நாடு

பித்தம் குறைக்க, எலும்புகள் வலுப்பெற இந்த பழத்தை தினமும் சாப்பிடுங்கள்!

இலந்தை பழமானது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன், சிவந்த நிறத்துடன் காணப்படும்.

அதிக ஊட்டசத்து நிறைந்த இந்த பழத்தின் விலை மிகவும் குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும், இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காணப்படுகிறது.

இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

வைட்டமின் சத்துக்கள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச் சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் அதிகமுள்ளது.

வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும். உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும். எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

மூளை நரம்பு

மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.

சூடு கட்டிகள் உடைய

இலந்தைப் பழ இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

பசியின்மை போக்க

பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.

தலைவலி போக்க

பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.

Back to top button
error: Content is protected !!