தமிழ்நாடுமாவட்டம்

சாத்தூர் வெடி விபத்து.. உயிரிழந்தவர்களுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல்..

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், அரசு எந்திரம் அலட்சியம் காட்டுவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் பலியாகி இருக்கும் நிகழ்வு பெரும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெற பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்துகளை நிரந்தரமாக தடுப்பதற்கு, பாதுகாப்பு விதிமுறைகளை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் – இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்காமல், அரசு எந்திரம் அலட்சியம் காட்டுவதால்தான் இத்தகைய உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், இனியும் இதுபோன்று நடக்காமல் தடுத்திட வேண்டும் எனக்‍ கேட்டுக்கொண்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!