தமிழ்நாடுமாவட்டம்

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

06.02.2021 முதல் 10.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

07.02.2021 முதல் 09.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!