வேலைவாய்ப்பு

அரசு மீன்வளத் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!

ஊர்தி ஒட்டுநர்‌ பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின்‌ குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும். இந்த தமிழக அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர்‌ உரிமம்‌ நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்‌. இலகுரக ஊர்தி ஒட்டுநர்‌ உரிமம்‌ பெற்று வாகனம்‌ இயக்குவதில்‌ மூன்று ஆண்டுகள்‌ அனுபவம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. தமிழில்‌ எழுத மற்றும்‌ படிக்க தெரிந்திருக்கவேண்டும்‌. தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.19500 முதல் ரூ.62000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே தங்களின் பதிவுகளை 02.09.2021 க்குள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.20,000/- சம்பளத்தில் சிவகங்கை அரசு காசநோய் மைய வேலைவாய்ப்பு!!
Back to top button
error: